அபுதாபியில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த ஆசிய பெண் கள்ளத்தொடர்பு காரணமாக கர்ப்பமானதால், அவரை கல்லால் அடித்து கொல்லும் மரணதண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது.
அபுதாபியில் வீட்டு வேலை செய்யும் ஒரு பெண் கடந்த சில நாட்களுக்கு முன் வயிறு வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்றார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதாக சோதனையில் தெரிய வந்தது. திருமணம் ஆகாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் கர்ப்பமானது எப்படி? என்று அபுதாபி போலீஸார்நடத்திய விசாரணையில் ,அவர் ஆண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் மீது வழக்கு தொடர்ந்த போலீஸார் அவரை கடுமையாக தண்டிக்கும்படி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். அபுதாபி நாட்டு சட்டப்படி, அப்பெண்ணை கல்லால் அடித்து கொல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அபுதாபியில் இந்த தண்டனையை பல வருடங்களாக யாருக்கும் கொடுக்கவில்லை. பல வருடங்களுக்கு பிறகு கல்லால் அடித்துக்கொல்லும் தண்டனையை நீதிமன்றம் தற்போதுதான் வழங்கியுள்ளது. எனினும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அபுதாபி நீதிமன்றம் ஆசிய பெண்ணுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அந்த பெண் எந்த நாட்டை சேர்ந்தவர், அவர் பெயர் மற்றும் வயது விபரங்களை தெரிவிக்க அபுதாபி போலீஸார் மறுத்துவிட்டனர்.
















