80 அடி குழியில் விழுந்து மணலால் புதைக்கப்பட்ட பெண், 30 நிமிடங்கள் கழித்து உயிருடன் மீட்பு.

jappan landஜப்பானில் கட்டிட வேலை ஒன்று நடந்து கொண்டிருந்தபோது பல டன் எடையுள்ள மணலால் மூடப்பட்ட ஒரு பெண் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த 34 வயது பெண் Mingmei Xiong என்பவர் கட்டிட வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த கட்டிடத்தின் அருகில் தோண்டப்பட்டிருந்த 80 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தவறி அலறியபடியே விழுந்தார். மேலும் அவர் விழுந்த அதிர்ச்சியில் அந்த பள்ளத்தில் மணல் சரிந்து மூடிவிட்டது.

இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த கட்டிட வேலையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக மணலை தோண்டி அந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு மீட்பு படையினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

30 நிமிட மீட்புப்பணிகளுக்கு பிறகு அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார். மணலில் புதைந்த ஒருவர் 30 நிமிடங்கள் எப்படி மூச்சுவிடாமல் இருக்க முடிந்தது என்று ஆராய்ந்தபோது, அந்த பெண் அணிந்திருந்த ஹெல்மெட்டில் உள்ள ஒரு துளையில் இருந்து வந்த காற்றை அவர் சுவாசித்துகொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய அந்த பெண்ணை, பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: , ,

Leave a Reply