நண்பன் மீது கொலைவெறி தாக்குதல் மேற்கொண்ட சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

arrestதனது நண்பர் ஒருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான சாலியவெவ பொலிஸ் பிரிவில் வசித்துவரும் டீ.ஜீ.பிரேமலால் என்பவர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்று (05) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆனுமதிக்கப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply