டிமிக்கி கொடுத்த நயன்தாரா, திட்டிய பிரகாஷ்ராஜ் : 1 வருஷத்துக்கு தெலுங்கு படங்களில் நடிக்கத் தடை!

nayanthara-prakashraj-அனாமிகா’ தெலுங்கு படத்தின் பப்ளிசிட்டி நிகழ்ச்சிகளுக்கு வராமல் டிமிக்கி கொடுத்ததால் அடுத்த 1 வருடத்துக்கு நயன்தாரா தெலுங்கு படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கும் நயன்தாரா சமீபத்தில் நடித்த படம் தான் அனாமிகா. இந்தப்படம் தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் ரிலீசாகியுள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இதன் ஆடியோ பங்ஷன், பிரஸ்மீட் உட்பட படத்தின் எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கும் நயன்தாரா வரவில்லை. இதனால் அப்படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும் கடுப்பானார்கள்.

விவகாரம் தெலுங்கு திரைப்பட டைரக்டர் சங்கம் வரை சென்றது. விவகாரத்தை விசாரித்த டைரக்டர் யூனினர் விசாரணைக்கு பிறகு, அடுத்த ஒரு ஆண்டுக்கு நயன்தாரா தெலுங்கில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்த 1 வருடத்துக்கு நயன்தாரா தெலுங்குப் படங்களை மறந்து விட வேண்டியது தான்.

இதேபோல் ‘ஆகடு’ என்ற தெலுங்கு பட ஷூட்டிங்கின் போது உதவி இயக்குனர்களை தரக்குறைவாக திட்டியதாக பிரகாஷ்ராஜ் மீது புகார் தரப்பட்டிருந்தது. அந்தப் படத்திலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டார்.

பின்னர் அந்த விவகாரத்தையும் விசாரித்த டைரக்டர் யூனியன் அவரையும் தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு 1 வருடம் தடை விதித்தது. தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கை சக நடிகர், நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: , ,

Leave a Reply