இலங்கைத்துறைப் பகுதி படையினரால் சுற்றி வளைப்பு- வெருகலில் பதற்றம்

lk-army2வெருகல் ஆறு கடற்படை முகாமில் கடமையாற்றும் வீரரொருவரின் மீது தாக்குதல் நடத்தியதுடன் ரி-56 ரக துப்பாக்கியை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடிய மூவரை கைது செய்யும் நோக்கிலேயே தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கடற்படை அறிவித்துள்ளது. இலங்கைத்துறை, ஈச்சிலம்பற்று, புன்னையடி, கல்லடி இலங்கைத்துறை முகத்துவாரம் போன்ற கிராமங்கள் இந்த சுற்றி வளைப்புக்கு உள்ளாகியுள்ளதுarmy

பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை ஆகியன இணைந்தே இந்த தேடுதல் நடவடிக்கையை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்களில் முன்னெடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கடற்படையினர் மேலும் தெரிவிக்கையில்,

கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படைவீரரொருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட மூவரிடமிருந்த பையை சோதனைக்கு உட்படுத்த முயன்றபோதே அந்த வீரரை தாக்கிவிட்டு பையையும் அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.அந்த பையை சோதித்தபோதே அதிலிந்த ரி-56 ரக ஆயுதம் மீட்கப்பட்டது என்றும் இதனையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் கடற்படையினர் அறிவித்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது வெருகல் ஆறு பகுதி கருணா அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: , , ,

Leave a Reply