காதல் திருமணத்தை எதிர்ப்பவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் விழுந்த செருப்படி!

loversகாதல் திருமணம் என்றாலே பெரியவர்கள் எவருக்கும் பிடிப்பதில்லை. சில பெற்றோர் காதலுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் பெண்பிள்ளை யின் பெற்றோராகவே இருப்பார். அதற்கு காரணம் சீதனம் கொடுக்க வசதி இல்லாமல் இருப்பதாகும். மற்றப்படி அனைத்து பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பாளர்களாகவே அந்த காலம் தொட்டு இருந்து வந்துள்ளனர்.

சாஸ்திரம், சம்பிரதாயம் பார்த்து புறோக்கரை நம்பி மாப்பிள்ளை, மணமகள் தேடுவதே சிறப்பானது என்பது அவர்களின் கருத்து. இதற்கு வலு சேர்க்கும் வகையில் ஜோதிடத்திலும், ஏதாவது தோசம் இருந்தால் அல்லது கோள்களின் கெட்ட சஞ்சாரம் இருந்தால் தான் நபர்கள் காதல் திருமணம் செய்யும் நிலை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நிச்சயம் செய்யும் திருமணத்தை ஆதரிக்கும் நபர்களின் முகத்தில் செருப்படி கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் அச்சுவேலி வளலாய் கதிரிப்பாய் பகுதியில் சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

புறோக்கர், அக்காளுக்கு கொண்டுவந்த ஜாதகம் பொருந்தவில்லை என்று ஜோதிடர் மறுக்க, தங்கச்சிக்கு முடித்துள்ளனர் பெரியோர் (?)

அவனுக்கும், தங்கச்சிக்கும் 10 பொருத்தமாம்.

இந் நிலையில் தான் அவன் அக்காளையும் தனக்கு தரும்படி கேட்டு தொடங்கிய தகராரு, இன்று மூன்று உயிர்களை காவுகொண்டுள்ளது.

இவ்வாறு ஒன்றும் தெரியாது, புறோக்கரையும், சாத்திரியையும் நம்பி மணம்முடித்து கொடுக்கும் அளவுக்கு துணிவுள்ள பெற்றோர் காதல் திருமணத்தை எதிர்ப்பது ஏன்….?

இங்கு நாங்கள் காதல் என்று குறிப்பிடுவது இந்திய அரசியல்வாதி கிழடு ஒன்று தன்னை விட 24 வயது குறைந்த பெண்ணை கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றதையோ, அல்லது பள்ளி வயதில் நாவுன்னி பத்தைக்குள் குடும்பம் நடத்தி வயிற்றை நிரப்பிக்கொண்டு வந்து நின்டதுகளையோ அல்ல. உன்மையான காதல் என்பது மனதால் இணைந்த நல்லொழுக்கமுள்ள பக்திமிக்க அன்பே ஆகும்.

Tags: , ,

Leave a Reply