இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக வெளியான தகவலை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் ஒருமுறை மறுத்து, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழக அரசியல்வாதி ஒருவர், இலங்கையில் இந்தியாவுக்கு எதிராக பாக்கிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக தெரிவித்தமை அரசியல் தேர்தல் நோக்கம் கருதிய அறிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் இல. கணேசனே இந்த கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இந்தநிலையில் அவர் கூறிய கருத்து. அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் பாகிஸ்தானிய உளவாளியாக செயற்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டமையைக் கொண்டு இந்திய தரப்பால் உறுதி செய்யப்படும் வகையில் அமைந்து விட்டது.
எனினும் அவ்வாறான செயற்பாடுகள் எவையும் இலங்கையில் நடைபெறவில்லை. நடைபெறவும் அனுமதிக்கப்படமாட்டாது என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
















