ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் முடிவை நாடே எதிர்பார்க்கிறது: கருணாநிதி

karunanithi5முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடே எதிர்பார்க்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது பேட்டி விவரம்:

நிருபர்: கல்வியாண்டு தொடங்கிவிட்டது. தனியார் கல்லூரிகளில் 25 சதவிகித சிறப்பு ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு ஒதுக்க முடியாது தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. தமிழக அரசும், மத்திய அரசும் நிதி ஒதுக்கவில்லை என்று சொல்கிறார்கள். மாணவர்கள் சேர்க்கையில் இது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறதே?

கருணாநிதி: இதற்காக மிகவும் வருந்துகிறேன். ஏதோ ஒரு காரணத்தை காட்டி தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் தீங்கினை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நிருபர்: பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில், போகிற போக்கைப் பார்த்தால், நாளைய தினமே இறுதித் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதே?

கருணாநிதி: அது பற்றி நான் சொல்ல முடியாது. பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கின் முடிவை நாடே எதிர்பார்க்கிறது.

நிருபர்: நாமக்கல்லில் ஓரிரு இடங்களில் மறு வாக்குப் பதிவு என்று செய்தி வந்துள்ளதே?

கருணாநிதி: அது ஒரு செய்தி; அவ்வளவுதான்.

நிருபர்: தமிழகத்தில் தொடர்ந்து மின் பற்றாக்குறை, மின்வெட்டு நீடித்து வருகிறது. அதன் காரணமாக கொலை, கொள்ளைகள் பெருகி, வெடிகுண்டு சம்பவங்களும் நடைபெறுகின்றன. தமிழக அரசு சார்பில் எதுவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே?

கருணாநிதி: முதலில் நாட்டில் வாழ்வோம் என்று நம்பினோம்; அந்த நம்பிக்கை எல்லாம் வீணாகி இப்போது காட்டில் வாழ வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறோம்.

Tags: , ,

Leave a Reply