வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி உள்ளதாக இயக்குனர் செளந்தர்யா கூறியுள்ளார். இந்த படத்தின் ஹைலைட்டாக இந்த சண்டைக்காட்சி இருக்கும் என்றும், ரசிகர்களுக்கு இந்த சண்டைக்காட்சிகள் புதுமையான அனுபவமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் Performance Capture Photo Realistic திரைப்படமாக வெளிவரும் கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளுக்காக மட்டும் சுமார் 50 நாட்கள் பணிபுரிந்ததாகவும், இந்த சண்டைகாட்சியின் பிரமாண்டத்தை திரையில் பார்க்க வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று செளந்தர்யா கூறியுள்ளார்.
கோச்சடையான் திரைப்படத்திற்கு இதுவரை 3600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளதாகவும், இன்னும் பல தியேட்டர் அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மூன்று வருடங்கள் கழித்து வெளிவரும் ரஜினி படம் என்பதால் ரசிகர்களிடம் இந்த படம் மாபெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















