பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைத்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கே.புதூரில் நடைபெற்ற மதிமுக வின் 21-ஆவது ஆண்டு துவக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று உறுதியளித்த வைகோ, தமிழகத்தில் ஆறு மாதங்களில் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
















