கடத்தப்பட்ட 276 பள்ளி மாணவிகளை மீட்க சிறப்புக்குழு. நைஜீரியாவுக்கு அனுப்பினார் ஒபாமா.

Tamil-Daily-News_obamaநைஜீரியாவில் 276 மாணவிகளை கடத்திய போக்கோ ஹராம் என்ற தீவிரவாதிகளை பிடிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்புப்படை ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி நைஜீரியாவில் உள்ள ஒரு பள்ளிக்குள் தீவிரவாதிகள் புகுந்து அங்கு கல்வி பயின்று கொண்டிருந்த 14 முதல் 16 வயதுள்ள சுமார் 300 மாணவிகளை கடத்தினர். இந்த கடத்தலின் ஒருசில மாணவிகள் தப்பித்து வீடு வந்து சேர்ந்தனர். இதுவரை 276 மாணவிகள் கடத்தப்பட்டதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் செக்ஸ் தொழிலாளர்களாக மாற்றிவிடுவோம் என தீவிரவாதிகள் பயமுறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மாணவிகளின் பெற்றோர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நவோமி முட்டா யாதார், என்பவர் தலைமையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. மாணவிகளை மீட்டுக்கொடுக்க முடியாத அரசு டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் என போராட்டக்குழு வலியுறுத்தியது. இந்நிலையில் போராட்டக்குழு தலைவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நைஜீரிய அரசுக்கு உதவி செய்ய அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு சிறப்புக்குழுவை நைஜீரியாவுக்கு அனுப்பியுள்ளார். இந்த குழு கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க உதவி செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply