தென்னக ரயில்வே துறை: மே மாதத்தின் முதல் நாள் சுவாதி தினம்

chennai-blastசென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான சுவாதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இனி ஒவ்வொரு மே மாதத்திலும், முதல் வேலை தினத்தை சுவாதி தினமாக கடைபிடிக்க தென்னக ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

குண்டு வெடிப்பில் பலியான சுவாதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று சுவாதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசிய தென்னக ரயில்வே பொது மேலாலர் ராகேஷ் மிஸ்ரா, “இனி வரும் ஒவ்வொரு மே மாதத்தின் முதல் வேலை தினத்தை தென்னக ரயில்வே சுவாதி தினமாக அனுசரிக்கும்.

அந்த சுவாதி நாளில் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த, எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படி எங்களை மறு அர்ப்பணம் செய்து உறுதிமொழி ஏற்போம். பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வினை பயணிகளுக்கும் எடுத்துரைப்போம்.” என்று தெரிவித்தார்.

குண்டு வெடித்தவுடன், அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்குமோ! என்று பயப்படாமல் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாக உதவி செய்து, பல உயிர்களை காப்பாற்றிய, ரயில்வே ஊழியர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags: , ,

Leave a Reply