கோச்சடையான் ரிலீஸில் திடீர் சிக்கல். முன்பதிவுகள் நிறுத்தம்.

kochadaiyaanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த கோச்சடையான் படத்தில் முன்பதிவுகள் இன்றுமுதல் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் சென்னை மற்றும் அனைத்து நகரங்களிலும் உள்ள தியேட்டர்களில் முன்பதிவுகள் திடீரென நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றாலும், விநியோகிஸ்தர்கள் கேட்ட மிகப்பெரிய தொகையை தியேட்டர்கள் அதிபர்கள் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினிக்கும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மூன்று வருடங்கள் கழித்து ரஜினியின் திரைப்படத்தை காண ஆவலுடன் இருந்த ரஜினி ரசிகர்கள் இந்த செய்தியினால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆயினும் தியேட்டர் அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் சிலமணி நேரங்களில் தியேட்டர் அதிபர்கள் சமாதானம் ஆகிவிடுவார்கள் என்றும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply