அரசியலில் காமெடி செய்த கேப்டன் மீண்டும் சினிமாவில் காமெடி செய்யப்போகிறார்

vijayakanthதமிழகத்தில் எல்லோரும் காமெடி நிகழ்ச்சிகளை டி.வியில் அல்லது காமெடி நிகழ்சிகளில் தான் கண்டு மகிழ்வார்கள். ஆனால் அந்த நிலை கடந்த சில வருடங்களில் மாற்றி சரித்திரம் படைத்தவர் விஜயகாந்த்.

சினிமாவில் இவர் பிடிக்காத தீவிரவாதிகள் இல்லை, இவர் அடிக்காத ரவுடிகள் இல்லை. காஷ்மீர் முதன் கன்னியாகுமரி வரை இவர் பெயர் கேட்டால் ஊரே நடுங்கும். இப்படி தமிழ் சினிமாவில் தனக்கென முத்திரை பதித்தவர் விஜயகாந்த். இவர் அரசியலில் குதித்த உடனே இவருக்கு இருந்த ஆக்க்ஷன் போய் விட்டது. இவர் கோபப்பட்டாலே மக்களுக்கு சிரிப்பு தான் வரும். வைகை புயல் வடிவேலை அடித்து துரத்திவிட்டு, அவருக்கு பதிலாக பிரச்சாரம் செய்கிறேன் என்ற பெயரில் மக்களை சந்தோஷப் படுத்தியவர் விஜயகாந்த்.

தேமுதிக கட்சியினரும் காசு கொடுக்காமல் கூட்டம் கூடுகிறதே என்று இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இவருடைய காமெடி நிகழ்சிகளை பார்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியதை மறுக்கமுடியாத உண்மை. ஆனாலும் இவரது அரசியல் செல்வாக்கு அதிமுகவும், திமுகவும் வியக்கும் அளவிற்கு கூடிக்கொண்டேதான் சென்றது. இவருடைய காமெடி பிரச்சாரங்களை இணையதளங்களும், தொலைகாட்சிகளும் ஒளிபரப்பி தங்களுடைய டி.ஆர்.பி ரேட்டிங்யை உயர்த்திக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு சூழலில் மக்களுக்கும் நல்லது செய்யும் பொறுப்பில் இருந்த விஜயகாந்த், தற்பொழுது தன்னுடைய மகனை நடிகனாக்க, இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் கடந்த சில மதங்களுக்கு முன் பட பூஜை செய்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் சண்முகபாண்டியனுக்கு சுத்தமாகவே நடிப்பே வரவில்லை. இதனால் முதல் நாளிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நடிப்பு பயிற்சி பெற்று வந்த பின்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இயக்குனருக்கு இது முதல் படம் என்பதால் முதல்படமே தோல்வி படம் கொடுக்க விருப்பம் இல்லை என ஒதுங்கி கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் அந்த படத்தை நானே இயக்குகின்றேன் என தற்பொழுது கலத்தில் இறங்கியுள்ளார்.

ஒரு துறையில் கூட நிலையாக இருக்க முடியாத இவரை நம்பி வோட்டு போட்ட மக்கள் நிலையை என்ன சொல்வதென்று தெரியவில்லை..!

Tags: , ,

Leave a Reply