அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு எதி­ராக இன்று அமைதிப் போராட்டம்

protest5யாழ். பல்­கலைக் கழ­கத்தின் பேரா­சி­ரியர், ஆசி­ரியர் சங்கத் தலைவர்,
மாணவர் ஒன்­றி­யங்­களின் தலை­வர்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இப் பல்­க­லைக்­க­ழக ஆசி­ரியர் சங்கம் இன்று அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்­த­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்.பல்­கலைக் கழகப் பேரா­சி­ரி­யர்கள், மாணவர் ஒன்­றி­யங்­களின் தலை­வர்கள் ஆகியோர் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றனர் என்றும்
அவர்­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை விடப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டு துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் பல்­லைக்­க­ழக வளா­கத்­திற்குள் ஒட்­டப்­பட்டும், வீசப்­பட்டும் உள்­ளதால் மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் அச்­ச­ம­டைந்­துள்­ளனர்.

கலைப்­பீட பீடா­தி­பதி வி.பி.சிவ­நாதன் மற்றும் பல்­க­லைக்­க­ழக ஆசி­ரியர் சங்கத் தலைவர் இரா­ச­கு­மாரன், மாணவர் ஒன்­றியத் தலைவர் சுபாபர், கலைப்­பீட மாணவர் ஒன்­றியத் தலைவர் கோமேஸ், விஞ்­ஞான பீட மாணவர் ஒன்­றியத் தலைவர் வேணு­கோபன் ஆகி­யோக்கு எதி­ராக அச்­சு­றுத்­தல்கள் விடப்­பட்­டுள்­ளன.

இதனை ஆட்சேபித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தாங்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply