கடந்த 2011ஆம் ஆண்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தாவில் பிளையன்ஸ்ரீயை பணியிடமாற்றம் செய்த குற்றம் நிரூபணம் ஆனதால் தாய்லாந்து பெண் பிரதமர் யிங்லக் சினவத்ராவை டிஸ்மிஸ் செய்ய நேற்று தாய்லாந்து நீத்பதி அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு தாய்லாந்து நாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் தீர்ப்பு கொடுத்த நீதிபதி சுப்பாட் கைமுக் வீட்டின் முன், பிரதமரின் ஆதரவாளர்கள் நேற்று இரண்டு வெடிகுண்டுகளை வீசியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வீசப்பட்ட நேரத்தில் நீதிபதி வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார். தற்போது நீதிபதியின் வீட்டிற்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது
நீதிபதி வீட்டில் குண்டு வீசியதோடு இல்லாமல் தாய்லாந்து முழுவதும் வெடிகுண்டு வீச்சு மற்றும் கலவரங்கள் ஆங்காங்கே நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கலவரம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. புதிய பிரதமரும், நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
















