3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம். 66 வயது நபரின் ஆணுருப்பை கத்தியால் வெட்டிய சிறுமியின் தாய்.

Sexual-Abuse8மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 66 வயது நபர் ஒருவரை சிறுமியின் உறவினர்கள் கட்டிவைத்து அந்த நபரின் மூன்று விரல்கள் மட்டும் ஆணுருப்பை கத்தியால் வெட்டி தண்டனை கொடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.

Francisco de Souza de Castro என்ற 66 வயது நபர் பிரேசில் நாட்டில் உள்ள Severinia, Sao Paulo என்ற நகரில் வாழ்ந்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகிலுள்ள வீட்டில் இருந்த மூன்று வயது அப்பாவி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி அழுதுகொண்டே தனது தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார், தனது உறவினர்களுடன் Francisco de Souza de Castro வீட்டிற்குள் புகுந்து அந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

பின்னர் சிறுமியின் உறவினர்கள் அவரை தூணில் கட்டிவைத்து கத்தியால் அவரது மூன்று கைவிரல்கள் மற்றும் அவரது ஆணுருப்பை தனியாக வெட்டியுள்ளனர். வலியால் துடித்துக்கொண்டிருந்த Francisco de Souza de Castroஐ நீண்ட நேரம் கழித்து மருத்துவமனையில் அந்த நகரத்தில் உள்ளவர்கள் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் அவரது ஆணுருப்பை மீண்டும் சேர்க்க முடியவில்லை. தற்போது உயிருக்கு போராடியபடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply