கற்பழிப்பு வழக்கில் பிரபல பாடகர் அதிரடி கைது. கேர்ள் பிரண்ட் கொடுத்த புகார்.

thivariAashiqui 2 என்ற திரைப்படத்தில் இந்தியா முழுவதும் ஹிட்டான Sun Raha Hai Na Tu என்ற பாடலை பாடி பெரும் புகழ் பெற்ற பிரபல பாடகர் அங்கிட் திவாரி கற்பழிப்பு வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் தன்னுடன் நீண்டநாள் பழகிய கேர்ள் பிரண்டை கற்பழித்ததாக மும்பை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை Versova காவல்நிலையைத்தில் அங்கிட் திவாரி மீது 376 (rape), 417 (cheating) and 493 (cohabitation by a man deceitfully inducing a belief of lawful marriage) of the IPC (Indian Penal Code). ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கிட் திவாரி தனது கேர்ள் பிரண்ட் நித்தி கண்ணா என்ற பெண்னுடன் சில வருடங்களாக நெருங்கி பழகியுள்ளார் என்றும், அவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் உறவுகொண்டுவிட்டு, தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அங்கிட்திவாரியின் அழக்கறிஞர் நாகேஷ் மிஷ்ரா, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அங்கிட், சில மாதங்களாக நித்தி கண்ணாவுடன் தொடர்பில் இல்லை என்றும், அவரை அங்கிட் தொட்டதுகூட இல்லை என்றும், அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்த குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.

நேற்று கைது செய்யப்பட்ட அங்கிட் திவாரி அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.

Tags: , ,

Leave a Reply