பாராளுமன்றக் கடமைகளை பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உதாசீனம் செய்து வருவதாக அமைச்சர் டியூ.குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். கோப் மற்றும் பாக் போன்ற பாராளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளை உறுப்பினர்கள் உதாசீனம் செய்து வருவதாகவும் இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடமை தவறிச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதியும் சபாநாயகரும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது என அவா தெரிவித்துள்ளார்.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் கடந்த மூன்றாண்டு அமர்வுகளில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகளே பிரசன்னமாகியிருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். தமது பொறுப்புக்களை உரிய முறையில் செய்யத் தவறும் உறுப்பினர்களுக்கு பதிலாக வேறும் உறுப்பினர்களை நியமிப்பதே சிறந்த வழிமுறையாகும் என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் காலத்தில் 225 உறுப்பினர்களுக்காக உணவு தயாரிக்கப்படுகின்ற போதிலு;ம பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பாராளுமன்ற உணவகத்தில் உணவு உட்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனால் பாரியளவில் உணவு விரயமாவதாகத் தெரிவித்துள்ளார்.சில பாராளுன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் பங்கேற்பதில்லை, சிலர் இடைநடுவில் சென்று விடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
















