தேசத்துரோகிகள் ஜனாதிபதியின் மனதை மாற்றி விடலாம்: வசந்த பண்டார

Wasantha-Bandaraஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதில் அவரின் பொறுப்பினை சரியாகச் செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சில தேசத்துரோகிகள் ஜனாதிபதியின் மனதை மாற்றி நாட்டிற்கு எதிரான செயல்களைச் செய்ய வற்புறுத்தலாம். எனவே, வட மாகாண ஆளுநரின் பதவி தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனமெடுத்துக்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் உறுப்பினர் வசந்த பண்டார தெரிவித்தார்.

தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினால் இன்று வெள்ளிக்கிழமை(9) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பினரால் வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கையில்,

குறிப்பாக சொல்வதாயின் வடக்கின் நிலைமைகள் தொடர்பிலும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் நன்கு அறிந்த ஒருவர் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி மட்டுமே. எனவே, அவர் விரும்பினாலும், விரும்பாவிடிலும் அரசாங்கம் அவரின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும்.

மேலும் ஆளுநரின் பதவிக்காலம் நிறைவடையும் காலத்துடன்தான் தென்னாபிரிக்க பிரதிநிதிகளின் இலங்கை விஜயமும் இடம்பெறவுள்ளது. எனவே, அனைத்து செயற்பாடுகளும் வடமாகாணத்திற்கு சாதகமாகவே இடம்பெறுகின்றன.

Tags: , ,

Leave a Reply