அமெரிக்காவில் 18 வயது இளைஞர் ஒருவர் மிகவேகமாக தனது மோட்டார் சைக்கிளை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி அதை வீடியோ படமும் எடுத்து யூடியூபில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார்.
தனது பெயர் இணையம் முழுக்க பேசப்படவேண்டும் என்பதற்காகவும், யூடியூப் மூலம் அதிக வருமானத்தை பெற வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவை சேர்ந்த 18 வயது இளைஞன் Robert Kelly என்பவர் தனது பைக்கில் கேமராவை பொருத்தி மிகவேகமாக ஓட்டி, அதை வேண்டுமென்றே வாகனங்களில் மோதவிட்டார். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், தனது மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான வீடியோவை யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்தார்.
இந்த வீடியோவை அதிகமானவர்கள் பார்த்தால் தனக்கு பெருமளவு பணம் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்திருந்த வேளையில் அவரை தேடி போலீஸ்தான் வந்தது. வேண்டுமென்றே விளம்பரத்திற்காக விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த விபத்தில் இவரை தவிர மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
















