அமெரிக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவி Elizabeth Raine என்பவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக கடந்த பிப்ரவரி மாதம் தனது இணையதளத்தில் அறிவிப்பு செய்தார். அவரது கன்னித்தன்மையின் உரிமையை பெற கோடீஸ்வர்களிடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் கடந்த 7ஆம் தேதி நடந்த இறுதி ஏலத்தில் அவருடைய கன்னித்தன்மையை $800,000 கொடுத்து ஒருவர் முழு உரிமம் பெற்றார்.
இதுவரை முகத்தை மறைத்து தனது இணையதளத்தில் புகைப்படம் வெளியிட்டிருந்த Elizabeth Raine, தற்போது முதல்முறையாக தனது முழு அளவிலான புகைப்படத்தை வெளியிட்டதோடு தனது பேட்டி அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அவரை ஏலம் எடுத்த கோடீஸ்வரர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
தன்னை ஏலம் எடுத்தவருடன் 12 மணிநேரம் மட்டும் டேட்டிங் செல்ல இருப்பதாகவும், செக்ஸ் உறவு உள்பட அவருடன் அந்த 12 மணிநேரத்தை செலவிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஏலத்தில் கிடைத்த பணத்தின் உதவியால் தனது மேல்படிப்பை தொடர உள்ளதாக தெரிவித்த Elizabeth Raine, கன்னித்தன்மையை ஏலம் விடுவதோ அல்லது விபச்சாரம் செய்வதோ ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை என்றும், அதை சட்டம் போட்டு தடுப்பது முறையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் விபச்சாரம் மற்றும் கன்னித்தன்மை ஏலம் தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த விளம்பரத்தை அவர் சிட்னியில் இருந்து கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















