கூரிய கம்பிகளுடன் 20 மணிநேரம் உயிருக்கு போராடிய துபாய் பெண். அதிர்ச்சி புகைப்படங்கள்.

girlமகளின் ஆசையை நிறைவேற்றும் நோக்கில் மரத்தின் அருகில் உள்ள சுவரில் ஏறி, பழங்களை பறிக்க முயன்ற துபாய் பெண் ஒருவர், திடீரென கால் ஸ்லிப் ஆகி கீழே விழுந்தார். அவர் விழுந்த இடத்தில் கூர்மையான கம்பிகள் அடங்கிய கிரில் கேட்டில் அவரது இடது கை சிக்கிக்கொண்டது.

இதை பார்த்த அவருடைய3 வயது மகள் அலறினார். ஆனால் துணிச்சல் மிகுந்த Ceyda Oruk, என்ற பெயருடைய அந்த பெண், மகளுக்கு சமாதான கூறி, தன்னுடைய மொபைல் போனை எடுக்க சொல்லி, பின்னர் மொபைல் போன் மூலம் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகியது. அதுவரை அவர் தைரியமாக இருந்ததோடு, தனது மகளுக்கும் ஆறுதல் கூறினார்.

மீட்புப்படையினர் விரைவாக வந்து, அவருடைய கையை கம்பியில் இருந்து உடனே எடுத்தால் ஆபத்து என கருதி, மிகப்பெரிய கட்டிங் பிளேடால் இரும்பிக்கம்பிகளை வெட்டி எடுத்து, கை மற்றும் இரும்புக்கம்பிகளோடு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் மிக லாவகமாக அவரை இரும்புக்கம்பிகளிடம் இருந்து மருத்துவர்கள் காப்பாற்றினர். சுமார் 20 மணிநேரம் கம்பிகளுடன் இருந்த அந்த பெண்ணின் தைரியத்தை மருத்துவர்கள் பாராட்டினர்.தற்போது அவர் நலமுடன் உள்ளார்

Tags: , ,

Leave a Reply