ஆர்யாவுடன் உறங்கிய ஹன்சிகா; சிம்பு நயனுக்கு போட்டியாக போட்டோ வெளியிட்டுள்ளனர்

arya-hansigaத்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாத்தின் போது நயன்தாரா சிம்புவின் தோளில் சாய்ந்த படி உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியானது. தற்பொழுது ஆர்யாவின் தோளில் சாய்ந்து உறங்குவது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஹன்சிகா.

தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களை வளைத்து போடும் டெக்னிக் தெரிந்தவர் ஆர்யா. தற்போது அவரிடம் சிக்கி இருக்கிறார் ஹன்சிகா. மகிழ் திருமேனி இயக்கும் மீகாமன் என்ற படத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் நள்ளிரவில் நடந்து வருகிறது. ஓய்வு அறையில் சென்று தூங்க கூட நேரமில்லாமல் பிசியாக உழைத்து கொண்டிருக்கும் ஆர்யாவும், ஹன்சிகாவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கண் உறங்கி ஓய்வு எடுக்கின்றனர். ஒரு பக்கம் ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் குட்டி தூக்கம் போடும் வகையில் ஆர்யாவின் தோளில் சாய்ந்து கண் அயர்ந்தார் ஹன்சிகா. அதேசமயம் ஹன்சிகாவின் தலை மீது தலை சாய்த்து தூங்கினார் ஆர்யா. இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் கேமராவில் கிளிக் செய்தார்.

பின்னர் இது ஹன்சிகாவிடம் காட்டப்பட்டது. அதை பார்த்து சிரித்தவர் அப்படியே அந்த ஸ்டில்லை தனது இணைய தள பக்கத்தில் போட்டு ரசிகர்களின் இதயத்தை பதம் பார்த்திருக்கிறார். ஹன்சிகாவின் இந்த அதிரடி விளையாட்டு, சிம்புவுடன் ஜோடியாக போஸ் கொடுத்த நயன்தாராவை வெறுப்பேற்றுவதற்கு தான். ஆர்யாவும் நயன்தாராவும் சமீபகாலமாக நெருங்கி இருந்தனர். ஆனால் சிம்பு உடன் நடித்ததில் இருந்து ஆர்யாவை விட்டு விட்டு சிம்புவுடன் ஒட்டிக்கொண்டுள்ளார் நயன்தாரா. இதனால் ஹன்சிகா மூலமாக நயன்தாராவை வெறுப்பேற்றும் வேலையில் இறங்கியுள்ளார் ஆர்யா

Tags: , ,

Leave a Reply