ஐஸ்வர்யாராயின் உண்மையான காதலன் நான்தான். இலங்கை தொழிலதிபர் வழக்கு?

aishwaryaஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்பே, அவர் தன்னைத்தான் காதலித்ததாகவும், ஐஸ்வர்யாராய் தனக்குத்தான் சொந்தம் என்றும் இலங்கை தொழிலதிபர் ஒருவர் வழக்கு போட கடந்த ஆண்டு முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் தனது வழக்கறிஞரிடம் ரூ.1.7 மில்லியன் கொடுத்ததாகவும், ஆனால் வழக்கு போடாமல் அந்த வழக்கறிஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தற்போது புகார் கூறியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் நிரோஷன் தேவப்ரியா என்பவர், ஐஸ்வர்யா ராய், தனது காதலி என்றும், அவரை தன்னிடம் சேர்த்து வைக்க வழக்கு போட வேண்டும் என்றும் தனது உறவினரும் வழக்கறிஞருமான ரோஷன் அஜீத் என்பவரிடம் கடந்த 2013ஆம் ஆண்டு ரூ.1.7 மில்லியன் கொடுத்துள்ளார். ஆனால் வழக்கறிஞர் பணத்தை வாங்கிக்கொண்டு வழக்கு போடாமல் காலம் தாழ்த்தியதால், தற்போது தொழிலதிபர் நிரோஷன், வழக்கறிஞர் மீதே வழக்கு போட்டுள்ளார். இந்த வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நிரோஷனிடம் இருந்து வாங்கிய தொகையை உடனே திருப்பியளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல் தவணையாக ரூ.1 மில்லியன் பணத்தை வழக்கறிஞர் நிரோஷனிடம் கொடுத்துவிட்டதாகௌம், மீதியை ஒருசில நாட்களில் கொடுத்துவிடுவதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் சமீபத்தில் தங்களது ஏழாவது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ள தருணத்தில் அவரை மையமாக வைத்து ஒரு வழக்கு நடந்து வருவதை கண்டு ஐஸ்வர்யாராய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply