பட­கு­களில் வரு­ப­வர்­களை தடுக்க புதிய எல்லைப் பாது­காப்பு முகவர் நிலையம் அவுஸ்­தி­ரே­லியா அறி­விப்பு

australian_flagஅவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு பட­கு­களில் வரும் சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­களை தடுத்து நிறுத்தும் முக­மாக சுங்க மற்றும் குடி­வ­ரவு திணைக்­க­ளங்­களின் செயற்­பா­டு­களை ஒருங்­கி­ணைத்து செயற்­றிறன் ­மிக்க புதிய முன்­ன­ரங்கு எல்லைப் பாது­காப்பு முகவர் நிலை­ய­மொன்றை ஸ்தாபிக்­க­வுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லியா வெள்­ளிக்­கி­ழமை
அறி­வித்­துள்­ளது.

இந்த புதிய எல்லைப் பாது­காப்பு முகவர் நிலையம் உயர் அதி­கா­ரத்­துவம் பொருந்­திய சிவி­லிய ஆணை­யாளர் தலை­மையில் செயற்­படும் எனத் தெரி­வித்த அவுஸ்­தி­ரே­லிய குடி­வ­ரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன், அந்த ஆணை­யாளர் பிரித்­தா­னி­யா­விலும் அமெ­ரிக்­கா­விலும் கையா­ளப்­படும் மாதி­ரி­களின் அடிப்­ப­டையில் அந்த ஆணை­யாளர் பட­கு­களில் வரும் சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் குறித்து தனக்கு நேர­டி­யாக அறிக்­கை­யி­ட­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

அவுஸ்­தி­ரே­லி­யா­வா­னது அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத பட­கு­களில் வரும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான தனது கடும் போக்கு நட­வ­டிக்­கையின் ஒரு அங்­க­மா­கவே இந்த புதிய எல்லைப் பாது­காப்பு முகவர் நிலை­யத்தை ஸ்தாபிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக அவர் கூறினார்.

எதிர்­வரும் வாரம் தனது முத­லா­வது வரவு செலவுத் திட்­டத்தை பழை­மை­வாத அர­சாங்கம் முன்­வைக்­க­வுள்­ள­தை­யொட்டி ஸ்கொட் மொரிஸன் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், பட­கு­களில் வரு­ப­வர்­களை தடுத்து நிறுத்­து­வதன் மூலம் 2.5 பில்­லியன் அவுஸ்­தி­ரே­லிய டொலரை சேமிக்கக் கூடி­ய­தாக இருக்கும் எனத் தெரி­வித்தார்.

அத்­துடன் ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்ட 4 புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ள­ளுக்­கான தடுப்பு நிலை­யங்­க­ளுடன் மேலும் 6 தடுப்பு நிலை­யங்­களை மூடக்­கூ­டி­ய­தாக இருக்கும் என அவர் கூறினார்.

அவுஸ்­தி­ரே­லிய எல்லைப் பாது­காப்பு கொள்­கையின் கீழ் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் இந்­தோ­னே­சி­யா­வுக்கு திருப்பி அனுப்­பப்­பட்டு வரு­கின்­றனர். அந்­நாட்­டி­லி­ருந்தே பெருமளவான புகலிடக்கோரிக்கையாளர்கள் படகுகளில் அவுஸ்திரேலியாவை வந்தடைவது வழமையாகவுள்ளது.

“புதிய எல்லை முகவர்நிலையத்தை ஸ்தாபிக்கின்றமை எமது எல்லைகளின் பழகாப்பை பலப்படுத்துவதாக அமையும்” என மொரிஸன் மேலும் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply