புலிகளின் நிதிப் பரிமாற்றம் தொடர்பாக சிறீலங்கா நியூசிலாந்திற்கு விளக்குமாம்!

new-lk-flagதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பரிமாற்றம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நியூஸிலாந்திடம் விளக்கமளித்துள்ளது. இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுமான ஜீ.எல். பீரிஸ் மற்றும் மரேய் மெக்கலி ஆகியோர் ஒக்லண்டில் சந்தித்த போது இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மரேய் மெக்கலி, தொடர்ந்து மூன்று முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை தொடர்பில் சாதகமான கருத்துகளை வெளியிட்டமைக்கு ஜீ.எல். பீரிஸ் இதன் போது நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவளிக்காமை தொடர்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் அண்மையில் புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனியாட்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விடுத்திருந்த தடை குறித்தும் அவரால் விளக்கமளிக்கப்பட்டது

Tags: , ,

Leave a Reply