சிறீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனையா?

Dinesh-Gunawardena_3சிறிலங்காவிலிருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டனவா? இந்திய தேர்தலுக்கு பின்னர் பதிலளிக்கப்படும் என்று தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிடமிருந்து இந்தியா ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதா என்பதற்கான பதிலை இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னர் வெளியிடுவதாக அரசு தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.

சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.தே.க. எம்.பி.யான தலதா அத்துகோரளவினால் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட அதி நவீன ஆயுதங்களை கோத்தபாய இந்தியாவிற்கு விற்பனை செய்ததாக பரவலாக பேசப்பட்டது.

இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் தோன்றியிருந்தன. இந்த நிலையிலேயே சிறிலங்காவிலிருந்து இந்தியா ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததா என்றும் அப்படி ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டால் அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்றும் ஐ.தே.க எம்.பி சபையில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே இந்தியத் தேர்தல் முடிந்தபின்னர் உரிய பதில் வளங்கப்படும் என்று தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply