சத்தீஸ்கரின் ஜஸ்பூர் மாவட்டம் பந்லகோன் என்ற பகுதியில் உள்ள ஒரு பெண், தனது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் உள்ளுர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் அவருக்கு திருமண பேச்சுவார்த்தை நடந்தது. பக்கத்து ஊரில் இருந்த ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க ஆசிரியையின் தாயார் பேச்சு நடத்தினார்.
இந்நிலையில் தனது வருங்கால மருமகனை தனது வீட்டில் ஒரு நாள் தங்க அனுமதித்தார் என்ற காரணத்தால் அந்தவீட்டில் இருந்த ஆசிரியைக்கு அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து கொடுமையான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஆசிரியையின் ஆடை முழுவதையும் அகற்றி மரத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர். மேலும் ரூ.1 லட்சம் அபராதம் கட்டாவிட்டால் ஊரைவிட்டு ஒதுக்கிவிடுவதாக பயமுறுத்தியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணைய செயலாளர் ஜெக்ராணி இகா கூறியது: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து உரிய சட்டப்பிரிவு களில் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென காவல் துறைக்கு கடிதம் எழுதி யுள்ளோம். காவல் துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறிய இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில்விடுவிக்கப்பட்டனர்.
















