மத்தியபிரதேச மாநிலத்தில் மணமேடையை பிணமேடையாக மாற்றிய காதலன் ஒருவனை பொதுமக்கள் அடித்து உதைத்து, போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து ஒரு அதிர்ச்சி தரும் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் குழந்தைகள் டாக்டர் ஜெயஸ்ரீ நம்தேவ் என்ற பெண்ணுக்கு, ரோஹித் என்பவருக்கு ஒரு திருமண மண்டபத்தில் திருமண சடங்குகள் நடந்துகொண்டிருந்தது. திருமணத்திற்கு முன்பாக மாலை மாற்றிக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. அந்த நேரத்தில் திடீரென நுழைந்த மணமகளின் உறவினர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணமகளின் கழுத்தில் சுட்டார். ஒரே ஒரு துப்பாக்கி குண்டு கழுத்தில் பட்டதும், மணமகள் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகள் மற்றும் மணமகனின் உறவினர்கள், துப்பாக்கியால் சுட்டவனை அடித்து உதைத்தனர். காவல்துறையினர்களுக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் வரும்வரை அந்த மனிதனை அடித்ததால் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தான்.
பின்னர் காவல்துறையினர் அவனை கைது செய்து விசாரணை செய்ததில் அவன் டாக்டர் ஜெயஸ்ரீயை காதலித்ததாகவும், அவரும் தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனை திருமணம் செய்ய முயன்றதால் சுட்டுக்கொன்றதாகவும் கூறினான்.
கலகலப்பாக இருந்த மணமேடை சில நிமிடங்களில் பிணமேடையாக மாறியதால் திருமண வீட்டார்கள் மிகவும் சோகமாக காட்சியளித்த
















