பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர், தஸ்லிமா நஸ்ரின் அவர்களுக்கு புற்றுநோய் இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.
சர்ச்சைக்குரிய பங்களாதேஷ் நாட்டு பெண் எழுத்தாளர் நஸ்ரின் அவர்கள் எழுதிய லஜ்ஜா நாவல் பெரும் பிரச்சனையை உண்டாக்கியதை தொடர்ந்து, அந்த நாட்டில் இருந்து அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு கடத்தப்பட்டார். அதன்பின்னர் இந்தியா, இங்கிலாந்து போன்றட்ட பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தஸ்லிமா நஸ்ரின், சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார்.
தற்போது நியூயார்க்கில் கடுமையான பனி இருப்பதால் நஸ்ரி இருமலால் அவதிப்பட்டார். பின்னர் அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய மார்பு பகுதியில் பெரிய கட்டி ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அவருக்கு கேன்சர் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமக தஸ்லிமா மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கூறுகையில், “பிரியமுள்ள இந்தியர்களே, எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், இதனால் நான் இறந்தால், தயவு செய்து எனது பூனை மினுவை பார்த்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகச்சிறந்த பூனை அது” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
தஸ்லிமாவின் அம்மா மற்றும் சகோதரர்கள் ஏற்கனவே புற்றுநோயால் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
















