மனிதனின் தோலில் இருந்து விந்தணுவை உற்பத்தி செய்யும் புதுமையான முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் விந்தணு குறைபாடு உள்ளவர்கள் அதிகளவில் இருப்பதால் இதற்கு தீர்வு காண அமெரிக்க பல்கலைக்கழக குழு ஒன்று புதிய ஆராய்ச்சி ஒன்றை செய்து வந்தது. இந்த ஆய்வில் மனிதனின் விந்தணுவை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்த ஆய்வில் அந்த குழு ஈடுபட்டது.
இரண்டு வருடகால தீவிர முயற்சிக்கு பின்னர் மனிதனின் தோலில் இருந்து விந்தணுவை உற்பத்தி செய்யலாம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். விந்தணு குறைபாடு உள்ளவர்கள், அவர்களுடைய மற்ற பகுதியில் உள்ள தோலின் மூலம் செயற்கை முறையில் விந்தணுவை உற்பத்தி செய்து, செயற்கைக்குழாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்விதமாக பிறக்கும் குழந்தைகளை அவர்கள் சட்டப்படி உரிமை கொண்டாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆராய்ச்சியில் இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து இன்னும் தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.
















