பிறந்தநாள் கொண்டாடிய 8 வயது சிறுவனுக்கு மதுவால் வந்த வினை!!

drinks3டெல்லி அருகே உள்ள நொய்டாவில், 8 வயது சிறுவன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நொய்டாவின் 58-வது செக்டாரில் நேற்று இரவு பிரியன்ஷு என்ற 8 வயது சிறுவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. அவனது வீட்டில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். பின்னர் உறவினர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

போதை ஏறியதும் பிரியன்ஷுவின் தந்தைக்கும், மாமன்களான சோனு, விஜய் தரம் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாமன்கள் இருவரும் சேர்ந்து சிறுவனின் தந்தையை உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக சிறுவன் தலையில் அடி விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், வழியிலேயே அவன் இறந்துவிட்டான்.

இதுதொடர்பாக சிறுவனின் தாய் ஓம்வதி கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply