வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் & விஸ்டம் பிலிம்ஸ் (பி)லிட் பட நிறுவனங்கள் இணைத்து தயாரிக்கும் படம் “பகடை… பகடை”
இந்த படத்தில் திலீப்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கில் படங்களில் நடித்திருக்கிறார். ‘ஜெயம்’படத்தில் வில்லனின் குழந்தை பருவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஹீரோயினாக திவ்யாசிங் நடிக்கிறார். ரிச்சு என்ற புதுமுகம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்யா சிங்க்குடன் பிறந்த தங்கை. அக்காவும் தங்கையும் ஒரே படத்தில் நடிக்கிறார்கள். முதல் படத்திலேயே அக்கா- தங்கையுடன் டூயட் பாடுகிறார் ஹீரோ திலீப்குமார். மற்றும் கோவைசரளா, இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி, சிங்கமுத்து, சங்கர், கனகப்ரியா, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் சசிசங்கர். இவர் சூர்யா – ஜோதிகா நடித்த பேரழகன் படத்தை இயக்கியவர். இவர் மலையாளத்தில் வெற்றி பெற்ற 15 படங்களை இயக்கியவர்.
அதில் இரண்டு படங்களுக்கு தேசிய விருது பெற்றிருக்கிறார். இது இவர் இயக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம் :
பணம் எப்படியெல்லாம் ஒருவன் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கிறோம். பகடைக்காய் மாதிரி பணம் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது இதைதான் இதில் பதிவு செய்கிறோம்.
இந்த கதாப்பாத்திரத்திற்கு திலீப்குமார் ஏகப் பொருத்தமாக இருந்ததால் அவரை ஒப்பந்தம் செய்தோம். பக்கா கமர்ஷியல் படமாக “பகடை…..பகடை” உருவாகி உள்ளது என்றார்.
















