அந்த நடிகையா இது… அடேங்கப்பா…! : தயாரிப்பாளர்களின் தூக்கத்தைக் கெடுத்த ‘ரிப்பன்’ நடிகை

sri-divya1அடடே அந்தப் பொண்ணா இப்படி என்று தயாரிப்பாளர்களை ஆச்சரியப்படுத்தும் நடிகையாகி விட்டார் ஸ்ரீதிவ்யா.

முதல் படமான ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில் பாவாடை, தாவணியில் வந்தவருக்கு அந்தப்படம் ரிலீசாகி அரையாண்டு கடந்து விட்ட நிலையிலும், இதுவரை அடுத்த படம் எதுவும் ரிலீசாகவில்லை. படம் வசூலை வாரிக்குவித்த அளவுக்கு மாஸ் ஹீரோக்களின் பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையாம்.

நடிக்கத் தெரிஞ்ச பொண்ணுதானே அப்புறம் ஏன் வாய்ப்புகள் வரவில்லை என்று அவரது நலம் விரும்பிகளில் சிலர் தங்களுக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் காரணம் கேட்டபோது ”அட இன்னாப்பா நீ… அந்தப்பொண்ணு பாவாடை, தாவணியில மட்டும் தான் நல்லாயிருக்கு, அப்புறம் எங்க அதை எங்க படத்துல நடிக்க வெக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்கள்.

அவ்வளவு தான், உடனே அப்படிச் சொன்ன தயாரிப்பாளர்களின் இ-மெயில் ஐடிகளை வாங்கி டஜன் கணக்கில் தான் எடுத்து வைத்திருந்த தனது கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா. அத்தோடு ”முதல் படத்தோட கதை அப்படி இருந்ததால நான் பாவாடை, தாவணியில நடிச்சேன். மத்தபடி நானும் கவர்ச்சியாக நடிக்கத் தயாராத்தான் இருக்கேன்” என்று சில சூடேற்றும் வரிகளையும் சேர்த்து எழுதி அனுப்பினாராம்.

போட்டோக்களைப் பார்த்த தயாரிப்பு வட்டங்களோ அவருக்காகவே ஒரு படத்தை தயாரித்தால் என்ன என்ற எண்ணத்துக்கு வந்து விட்டார்கள். அந்தளவுக்கு போட்டோக்கள் அவர்களின் இரவுத் தூக்கத்தை கெடுப்பவையாக இருந்தனவாம்.

Tags: , ,

Leave a Reply