உலகத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிய மன்மோகன்சிங்

manmohan2பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், உலகத் தலைவர்கள் பலருக்கு மன்மோகன்சிங் பிரியாவிடை கடிதம் அனுப்பியுள்ளார்.

பத்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் மிக விரைவில் பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறவுள்ளார்.

இந்நிலையில், இதுவரை காலமும் அவருடன் இணைந்தும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீனாவின் முன்னாள் பிரதமர் வென் ஜியாபாவோ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜெர்மன் பிரதமர் அஞ்சலா மார்கெல் உள்ளிட்டோருக்கு மன்மோகன் சிங் தனது பிரியாவிடை கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை காலமும் அவருடன் இணைந்தும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதிக்கு குறித்த பிரியாவிடை கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக இது வரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply