இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 56 வயது Shoja Shojai என்ற தொழிலதிபர், பல நாடுகளில் இருந்து மாடல் அழகிகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி வந்து ஆடம்பர பங்களாவில் பூட்டி வைத்து, தினமும் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். Shoja Shojai அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தொழிலதிபர் Shoja Shojai, லண்டனில் உள்ள பேஷன் பள்ளியில் படித்த மாணவிகள் ஒவ்வொருவராக மயக்கி, அவர்களுக்கு ஆசைவார்த்தை கூறி ஸ்பெயினில் உள்ள தனது ஆடம்பர மாளிகைக்கு அழைத்து செல்வார். பின்னர் அங்கு பூட்டி வைத்து தினமும் பாலியல் பலாத்காரம் செய்வார். இவ்வாறு ஒரே பள்ளியில் பயின்ற 9 மாடல் அழகிகளை தனது ஸ்பெயின் பங்களாவில் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவர்களில் ஏழு பெண்கள் கர்ப்பமாகி குழந்தைகளும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண், கடைக்கு வெளியே செல்வதாக கூறிவிட்டு, பின்னர் ஸ்பெயின் காவல்நிலையத்தில் தன்னை செக்ஸ் அடிமையாக தொழிலதிபர் வைத்திருப்பதாக புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார், தொழிலதிபர் Shoja Shojaiவை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தொழிலதிபர் Shoja Shojai, தான் யாரையும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை, அழகிகளின் விருப்பத்தின்பேரில்தான் செக்ஸ் உறவு கொண்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் ஸ்பெயின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
















