தொடையில் குத்தி பின்பக்கமாக வெளியே வந்த மரக்கிளை. சீனாவில் அதிர்ச்சி விபத்து.

china-accidentசீனாவில் டிரக் டிரைவர் ஒருவருக்கு நேர்ந்த விபத்தில், மரக்கிளை ஒன்று அவருடைய முன்பக்க தொடையில் குத்தி, பின்பக்கமாக வெளியே வந்ததால், அந்த டிரைவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சீனாவில் உள்ள 43 வயது Farmer Wang Yang என்பவர் நேற்று விவசாயப்பொருட்களை டெலிவரி செய்துவிட்டு, தனது டிரக் ஒன்றில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடுவே திடீரென ஒரு மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அந்த கிளை டிரக்கின் முன்பக்கத்தை துளைத்துக்கொண்டு Farmer Wang Yang அவர்களின் முன்பக்க தொடை வழியாக நுழைந்து பின்பக்கமாக வெளியே வந்தது.

இதனால் நடு சாலையில் அவர் வலியால் துடித்துக்கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அந்த வழியே வந்த மீட்புப்படையினர்களின் ஒரு குழுவினர் Farmer Wang Yang நிலையை பார்த்து அவரை காப்பாற்றினர். முதலில் மரக்கிளையை துண்டித்து, உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் மரக்கிளையை அவரது தொடையில் இருந்து அகற்றுவது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

டிரக் டிரைவர் வெறும் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே சென்றதாகவும், திடீரென கிளை முறிந்து டிரக்கின் முன் விழுந்ததால் டிரைவர் நிலைகுலைந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: , , ,

Leave a Reply