தமிழர் உரிமைக்கு மதிப்பளிப்பதே பெளத்தர் உரிமைக்கு உத்தரவாதம்; அமைச்சர் ராஜித சுட்டிக்காட்டு

rajitha-senarathneதமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அவற்றைப் பாதுகாத்தால் தான் பெளத்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச தாதியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “”நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க வேண்டுமாயின், அதற்கு வைத்தியர்களும், தாதியர்களும் ஒன்றிணைந்த சேவையை வழங்கவேண்டும்.

தாதியர்களுக்கு சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வைத்தியர்கள் மறுக்கின்றனர்.

வைத்தியர்கள் உலகை திறந்த மனதுடன் பார்க்க வேண்டும். தாதியர்களின் உரிமைகளை வைத்தியர்கள் வழங்க வேண்டும். அவர்களின் உரிமைகளை முடக்கும் செயலில் வைத்தியர்கள் ஈடுபடக்கூடாது. குறிப்பாக நாட்டிலுள்ள சிங்கள மக்கள் தமது உரிமைகளுடன் சிறப்பாக வாழவேண்டுமாயின், அவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அது போலவே, வைத்தியர்கள் தமது உரிமைகளுடன் சிறந்த சேவையை வழங்க வேண்டுமாயின், அவர்கள் தாதியர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும். எனவே, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சேவையாற்றும் நிலை தாதியர்களுக்கு இனியும் ஏற்படக்கூடாது. அடுத்த வருடம் தாதியர் தினத்தைக் கொண்டாடும் போது, அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு சிறந்த நிலையில் இருக்க வேண்டும்” என்றார்.

Tags: , ,

Leave a Reply