கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் வீடியோ வெளியீடு. கட்டாயப்படுத்தி முஸ்லீம்களாக மாற்றியதால் பரபரப்பு.

nijeria-studentகடந்த மாதம் நைஜீரியாவில் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளின் கதி என்னவென்று தெரியாத நிலையில் தீவிரவாதிகள் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் மாணவிகள் அனைவரும் கட்டாயப்படுத்தி முஸ்லீம் மதத்திற்கு மாற்றப்பட்டது என்பதை அறிந்து நாடே கொந்தளிப்பில் உள்ளது.

முஸ்லீம் மதத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் அனைத்து மாணவிகளுக்கும் முஸ்லீம் பெண்கள் அணியும் ஆடை கொடுக்கப்பட்டதாக கூறியுள்ள தீவிரவாதிகளின் தலைவர், ஜெயிலில் இருக்கும் தங்கள் இயக்கத்தை சேர்ந்தவரக்ளை விடுதலை செய்தால் அனைத்து மாணவிகளையும் விடுதலை செய்துவிடுவதாகவும் கூறியுள்ளான். இதனால் நைஜீரியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் மாணவிகள் அனைவரும் பயத்தில் நடுங்கிக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அனைத்து மாணவிகளும் தரையில் நடுக்கத்துடன் உட்கார்ந்திருந்தனர். மேலும் வீடியோவில் சுமார் 130 மாணவிகள் மட்டுமே இருந்தனர் என்றும் மீதியுள்ள மாணவிகள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply