நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சமந்தா, தற்போது விஜய்யுடன் கத்தி, மற்றும் சூர்யாவுடன் அஞ்சான் ஆகிய திரைபடங்களில் நடித்து வருகிறார். மேலும் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார்.
இந்நிலையில் சமந்தா நடிகர் சித்தார்த்தை ரகசிய திருமணம் செய்துகொண்டு சித்தார்த் வீட்டில் குடும்பம் நடத்துவதாக தெலுங்கு படவுலகில் கிசுகிசு கிளம்பியுள்ளது.
மேலும் சமந்தாவின் கால்ஷீட் விவகாரம் முழுவதையும் சித்தார்த்தின் அப்பாதான் கவனிக்கிறார் என்றும், கூறப்படுகிறது. கத்தி, மற்றும் அஞ்சான் திரைப்படங்கள் வெளிவரும் வரை சமந்தாவின் திருமணம் ரகசியமாக வைக்கப்பட அந்த பட இயக்குனர்களிடம் சமந்தா உறுதி அளித்திருந்ததாகவும், ஆனால் அதற்குள் ஊடகங்கள் அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்வதை கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின்னர் சமந்தா தொடர்ந்து நடிப்பார் என்றும், அவருடைய கால்ஷீட்டை கவனிக்கும் மேனேஜராக அவரது மாமனார் தொடர்ந்து செயல்படுவார் என்றும் சமந்தா தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
















