நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்போரின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும் – கெஹலிய

hegalia3நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்போரின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், நாட்டை பிளவுபடுத்த எத்தனிப்போரின் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு தொடர்பில் பிழையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களுக்கு, நாட்டின் மெய்யான நிலைமைகளை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இதற்காக விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஜனாதிபதி பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.சில நாடுகள் யுத்தத்தை நிறுத்துமாறு நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.சில நாடுகள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவும், சில நாடுகள் கப்பல்களை அனுப்பி வைக்கவும் முனைப்பு காட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஜனாதிபதி திடமான நிலைப்பாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் என அவர் தெரிவித்துள்ளார்

Tags: , ,

Leave a Reply