பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக போராட வேண்டியது அவசியமானது – ஜனாதிபதி

Mahinda-Rajapaksa1பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக போராட வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள், பயங்கரவாதிகளினால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நைஜீரிய ஜனாதிபதி ஜொனதன் குட்லக்கிற்கு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.இலங்கையில் சிறுவர் சிறுமியர் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் பயங்கரவாதம் காரணமாக இளைஞர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி வகிக்கும் நாடு என்ற ரீதியில் இலங்கை, நைஜீரிய மக்களுக்கு பக்க பலமாக செயற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் சகல விதமான பயங்கரவாத நடவடிக்கைகளும் தடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அதற்காக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டனக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply