தலைமன்னாரில் புகையிரத காணியில் இருப்பதாக கூறப்படும் 22 குடும்பங்களை உடனடியாக வெளியேறக் கோரிக்கை

land-ravi1மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் சுமார் 22 குடும்பங்களை எதிர்வரும் 14 தினங்களுக்குள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என புகையிரத திணைக்கள அதிகாரிகள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,,,

தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் புகையிரத நிலையத்திற்கு சொந்தமானது என கருதப்படும் குறித்த பகுதியில் சுமார் 40 தொடக்கம் 45 வருடங்களுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறித்த காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் உள்ளது. குறித்த பகுதியில் உள்ள 22 வீடுகளில் பல வீடுகள் நிரந்தரமான வீடுகள்,ஒரு சில வீடுகள் தற்காலிக கொட்டில்கள். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரச சார்பற்ற அமைப்புக்களினால் ஏற்கனவே வீட்டுத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புகையிரத தலைமையகத்தினால் தலைமன்னார் ஸ்ரேசன் கிராம அலுவலகர் ஊடாக கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த 22 பேரூக்கும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. புகையிரத காணியில் அனுமதியில்லாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்பை அகற்றிக்கொள்ளுமாறு அறிவித்தல் எனும் தலைப்பில ; கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் புகையிரத திணைக்களத்திற்கூரிய புகையிரத காணியை அனுமதியில்லாமல் கைப்பற்றிக்கொண்டு அனுமதியற்ற நிர்மாணிப்பை மேற்கொண்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அக்காணிளை பயண்படுத்துவது சட்டவிரோதமானதாக காணப்படுவதோடு உடனடியாக இக்காணியில் அமைக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புக்களை அகற்றி எதிர் வரும் 14 தினங்களுக்குள் அகற்றப்படாது விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 தொடக்கம் 45 வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக மக்கள் வாழ்ந்து வருகின்ற குறித்த காணியில் இருந்து எங்களை எழும்பிச் செல்லுமாறு கூறினால் நாங்கள் எங்கு செல்வது என அந்த மக்கள் கேல்வி எழுப்பியுள்ளனர். எனவே இக்காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப்பெற்றுத்தருமாறு அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply