சிங்கப்பூரில் ஒரு பெண் தனது டாய்லெட்டை பயன்படுத்தும்போது டாய்லெட்டின் துளையில் இருந்து வெளிவந்த 6 அடி நீளமுள்ள பாம்பு கடித்ததால் கடும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளார்.
சிங்கப்பூரின் அடுக்குமாடி வீடு ஒன்றில் குடியிருக்கும் 34 வயது பெண் Noraslinda Asat. இவர் நேற்று தனது வீட்டில் உள்ள டாய்லெட்டில் இருந்தபோது தனது வலது தொடையில் ஏதோ கடிப்பதை போன்று உணர்ந்தார். பின்னர் குனிந்து பார்க்கையில் தன்னை கடித்தது ஒரு ஆறடி நீள பாம்பு என்பதை அறிந்தவுடன் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக தன்னுடைய கணவரிடம் நடந்ததை கூறினார்.
கணவர் உடனடியாக மீட்புப்படையினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனையில் Noraslinda Asat, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையில் சிறிது நேரத்தில் குணமானார். ஆனால் மனதளவில் அவர் மிகவும் பாதிக்கபட்டுள்ளதாக தெரிகிறது. டாய்லட்டை பார்த்ததுமே அலறியடித்து ஓடுகிறார்.
மீட்புப்படையினரால் அந்த பாம்பை பிடிக்க முடியவில்லை. இவருடைய வீட்டின் டாய்லெட்டில் பாம்பு வருவது இது முதல்முறையல்ல. சில மாதங்களுக்கு முன் இதேபோல் ஆறடி நீள பாம்பு ஒன்றை இவருடைய தாயார் அதே டாய்லெட்டில் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















