புத்தரின் போதனைகளின் அடிப்படையில் நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம் : ஜனாதிபதி

mahindanew_CIபுத்­தரின் போத­னை­களின் அடிப்­ப­டையில் அமைந்­துள்ள ஒரு பண்­பான சமூகம் என்ற வகையில் நாம் உலக நாடுகளுக்கு மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெசாக் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

புத்­த­பெ­ரு­மானின் பிறப்பு,ஞானம் பெறுதல் மற்றும் பரி­நி­ரு­வாண நிலை அடைதல் என்ற மூன்று முக்­கிய நிகழ்­வு­களைக் குறித்து நிற்கும் வெசாக் பண்­டி­கையை நாம் பூரண அரச அனு­ச­ர­ணை­யுடன் மிகுந்த பக்­தி­யு­ணர்­வுடன் கொண்­டா­டு­கிறோம்.

வெசாக் பண்­டிகை இலங்­கை­யிலும் உல­க­மெங்­கி­லு­முள்ள பௌத்த மக்­களின் மிகவும் புண்­ணியம் வாய்ந்த ஒரு பண்­டி­கை­யாகும். பல நூற்­றாண்­டு­க­ளாக மிகுந்த தியா­கத்­துடன் பௌத்த சம­யத்தின் தூய வடி­வ­மான தேர­வா­தத்தைப் பாது­காத்த நாம் புத்­தரின் பிர­சன்னம் எங்கும் பர­வி­யி­ருக்கும் மகிழ்ச்­சி­யு­ணர்­வுடன் இப்­பண்­டி­கையைக் கொண்­டா­டு­கிறோம்.

புத்­தரின் போத­னைகள் உல­கிற்கு மிகப்­பெரும் சமா­தானச் செய்­தி­யாகும். வெறுப்பும் குரோ­தமும் கவ­லைக்­கான காரணி என்­ப­தையும் அன்பும் கரு­ணையும் மன­நி­றை­வுக்­கான வழி என்­ப­தையும் புத்த சமயம் உல­கிற்கு எடுத்துக் காட்­டி­யுள்­ளது. இனம், மதம், குலம் மற்றும் கோத்­திரம் என்­ப­வற்றின் அடிப்­ப­டை­யி­லான எல்­லாப்­பி­ரி­வு­களும் அர்த்­த­மற்­றவை என்றும் ஒரு மனி­தனின் அந்­தஸ்த்து அவ­னது நல்ல அல்­லது தீய நடத்­தையின் மூலமே அள­வி­டப்­ப­டு­கி­றது என்றும் அது குறிப்­பி­டு­கி­றது. வாழ்­வா­தா­ரங்கள் புத்­தரின் போத­னை­களின் அடிப்­ப­டையில் அமைந்­துள்ள ஒரு பண்­பா­டான சமூகம் என்ற வகையில் நாம் உலக நாடு­க­ளுக்கு மத்­தியில் தலை நிமிர்ந்து நிற்­கின்றோம்.

ந அத்­த­ஹேது ந பரஸ்ஸ ஹேது – ந புத்­த­மிச்சே த தனங் ந ரட்டங் ந இச்­செய்ய அதம்­மேன ஸமித்­தி­மத்­தனோ- ஸஸி­லவா பஞ்­ஞவா தம்­மிகோ ஸியா
தனக்­கா­கவும் பிற­ருக்­கா­கவும் மக்கட் பேற்­றையும் அர­சாட்­சி­யையும் விரும்பக் கூடாது. முறை தவ­றிய வழியில் தனது சொந்த நன்­மையை நாடக்­கூ­டாது. அத்­த­கை­ய­வனே அறிவும் அறமும் உடை­யவன் ஆவான் என புத்தர் பெருமான் குறிப்­பி­டு­கிறார்.
புத்­தரின் போத­னை­களால் வளம் பெற்­றுள்ள ஒரு சமூ­கத்தில் எமது எதிர்­பார்ப்­புக்கள் தம்­ம­ப­தவில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள இந்த வச­னங்­க­ளுக்கு ஏற்ப சிறந்த போத­னை­களை கௌர­விப்­பதன் அடிப்­ப­டையில் அமைந்­த­வை­யாகும். எனவே நாம் ஏனை­ய­வர்­களின் சுதந்­தி­ரத்­தையும் கௌர­வத்­தையும் அர­சாங்கக் கொள்­கை­க­ளி­லேயே உறு­தி­யாகப் பாது­காத்­துள்ளோம்.

புத்­தரின் போத­னை­க­ளுக்­கேற்ப தமது வாழ்­வி­யலைக் கடைப்­பி­டிப்­ப­வர்கள் என்ற வகையில் நன்­மையை அடைந்து கொள்­வதில் மிகுந்த உறு­தி­யோடு ஒருநாள் வாழ்­வது அது இல்­லாமல் நூறு வருடங்கள் வாழ்வதை விட பெறுமதியானது என்பது எமது புரிதலாகும். எனவே இந்த வெசாக்கில் இந்த உலகிற்கும் அதற்குப் பின்னரும் அபரிமிதமான நன்மைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு தாமதமின்றி முயற்சிப்போம்.

Tags: , ,

Leave a Reply