அரசாங்கத்திலிருந்து விலக வேண்டாம்: அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு மகாநாயக்கர்கள் அறிவுரை

vimal veerawansaஅரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு, பௌத்த பீடாதிபதிகள் அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள விரிசலை அடுத்து, அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி, 12 கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், அரசாங்கத்தில் இருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகிக் கொள்ளப் போவதாக விமல் வீரவன்ச அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தன்னுடைய கோரிக்கைகளை விள, நேற்று கண்டியில் அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளை சந்தித்து, விமல் வீரவன்ச பேச்சு நடத்தியுள்ளார். இதன்போதே, அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்ள வேண்டாம் என்றும், அது வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இன்னும் வாய்ப்பாகி விடும் என்றும் அவர்கள் அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருந்தபோதிலும், தமது கட்சியின் மநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 அம்சத் திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் தாம் கையளிக்கவிருப்பதாகவும், ஜனாதிபதி இதனை நிராகரித்தால் தமது அடுத்த கட்ட நகர்வு குறித்து அதன் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கம் தற்போது தவறான ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது என மகாநாயக்கர்களிடம் தெரிவித்த அமைச்சர் வீரவன்ச, அரசாங்கத்தை சரியான பாதைக்கு மீண்டும் கொண்டுவருவதற்காகவே குறிப்பிட்ட தீர்மானங்களை கட்சி மாநாடு நிறைவேற்றியிருப்பதாககவும் விளக்கினார். இதனைவிட அரசாங்கத்தை சங்கடத்துக்குள்ளாக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் தமக்குக் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த வேளையில் அதற்கு உதவுவதற்கு நாம் முன்வந்திருந்தோம். அரசாங்கத்துடன் ஒத்துழழ்துச் செயற்பட்டோம். ஆனால், அரசாங்கத்ததின் தவறான கொள்கைகளைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தத் தீர்மானங்களை தாம் முன்வைத்திருப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்

Tags: , ,

Leave a Reply