வடபகுதியில் மீண்டும் சுற்றிவளைப்பு தேடுதல் வடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் மகிலங்குளம், சரசாலை. அரியாலை, பெரியபச்சில பளை மற்றும் உடையார்கட்டு ஆகிய பிரதேசங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் வடக்கில் மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 15 கைக்குண்டுகள், 02 கிளைமோர் குண்டுகள், 01 ஆட்கொல்லி குண்டு, 01 குண்டு மற்றும் 01 ஆர்.ஜி.பி.குண்டு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















