சீனாவில் டாக்ஸி டிரைவர் ஒருவரின் நேர்மை குறித்து நாடே பெருமையாக பேசுகிறது. அவரது டாக்சியில் பயணம் செய்த பயணிகள் இருவர் 170,000 சீன யான் பணத்தை தவற விட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் அந்த டாக்சி டிரைவர் அந்த பணத்தை உரியவரிடம் நேர்மையாக சேர்த்தார். நேற்றைய சமூக வலைத்தளத்தில் அவருடைய பெயர்தான் அதிகம் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் அவர் நாடு முழுவதும் பெயர் பெற்றுவிட்டார்.
சீனாவை சேர்ந்த Mr Lei என்ற டாக்சி டிரைவரின் டாக்சியில் நேற்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவர் பயணம் செய்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பணப்பையை மறந்துவிட்டு டாக்சியிலேயே விட்டுச்சென்றனர். இதையறிந்த டாக்சி டிரைவர், அந்த பணப்பையில் இருந்த விலாசத்தை கண்டுபிடித்து அவர்களிடம் நேரடியாக சென்று அந்த பணத்தை ஒப்படைத்தார்.
பணத்தை காணாமல் அதிர்ச்சியில் இருந்த அவர்கள் டாக்சி டிரைவர் Mr Lei அவர்களின் நேர்மை குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். அவருக்கு 10,000 யான் பரிசாக கொடுக்க முன்வந்தனர். ஆனால் Mr Lei, அந்த பரிசை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தன்னுடைய டாக்சியில் பயணம் செய்தவர்கள் யாரும் பணத்தை தொலைத்த அனுபவத்தை பெறக்கூடாது என்பதுதான் தனது விருப்பம் என்று தெரிவித்தார்.
இவருடைய நேர்மையை பாராட்டி சீனாவில் உள்ள சமூகவலைத்தளத்தில் பணத்தை பெற்றுக்கொண்டவர் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரை பல லட்சக்கணக்கான நபர்களால் பகிரப்பட்டு, டாக்சி டிரைவர் Mr Lei, ஒரே நாளில் நாடு முழுவதும் போற்றுதலுக்குரிய ஒரு நபராக மாறிவிட்டார்.
















