அமெரிக்காவை உலகிற்கு அறிமுகப்படுத்திய வரலாற்று நாயகன் கொலம்பஸ் பயணம் செய்ததாக கருதப்படும் கப்பல் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் 500 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
500 ஆண்டுகளுக்கு முன் உலகை கப்பலில் சுற்றிவந்த கொலம்பஸ், மூன்று கப்பல்களில் மாறி மாறி பயணம் செய்ததாக வரலாறு கூறுகிறது. இந்த கப்பல்களில் ஒன்றுதான் சாந்தா மரியா என்ற கப்பல். இந்த கப்பல் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன் சிதைந்து போய் கடலில் மூழ்கியதாக கூறப்பட்டது.
தற்போது இந்த கடல் கரீபியன் தீபகற்ப பகுதியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கபட்டுள்ளது. கற்பாறை ஒன்றின் இடுக்குப்பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் இந்த கப்பலின் சிதைந்த பாகங்களை மீட்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த கப்பல் சாந்தா மரியா கப்பல் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த கப்பலை மீட்டு, அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் புகழுக்கு பெருமை சேர்ப்போம் என்று ஆராய்ச்சி குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
















